புத்தாண்டு உடல்நலம், மகிழ்வான வாழ்வு, அமைதி மற்றும் வளத்தை வழங்கட்டும்
வரவிருக்கும் புதிய ஆண்டு, அனைவரின் வாழ்க்கையிலும் சிறந்த உடல்நலம், மன நிறைவு, சமூக அமைதி மற்றும் பொருளாதார வளம் ஆகியவற்றை அருளட்டும் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில், விக்சித் பாரத் என்ற முன்னேற்றப் பாதையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நடைபோடும் இந்த காலகட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு கொண்ட வழிகாட்டுதலின் கீழ், மக்கள் சேவை, திறந்த நிர்வாகம் மற்றும் அனைவரையும் இணைக்கும் வளர்ச்சி என்ற கொள்கைகளில் நமது உறுதியை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.