இந்தியாவிலேயே தயாரிக்க விருப்பம் தெரிவித்த ரஷ்யா!

Date:

இந்தியாவிலேயே தயாரிக்க விருப்பம் தெரிவித்த ரஷ்யா!

ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை உள்நாட்டிலேயே உருவாக்க இந்தியா தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், ரஷ்யா தனது ஏற்றுமதி பதிப்பான சுகோய்–57E (Su-57E) ஸ்டெல்த் போர் விமானத்தை இந்தியாவுக்கு வழங்கவும், அதையே இந்தியாவிலேயே தயாரிக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான விரிவான தகவல்களைக் கொண்ட செய்தி தொகுப்பு இதோ.

உலகளவில் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை தயாரிக்கும் நாடுகளாக அமெரிக்காவும் ரஷ்யாவும் முன்னணி இடங்களில் உள்ளன. அமெரிக்காவின் F-35 மற்றும் ரஷ்யாவின் சுகோய்-57 ஆகியவை இந்தத் தலைமுறையின் முக்கிய போர் விமானங்களாகக் கருதப்படுகின்றன. கடந்த நவம்பர் மாதம் துபாயில் நடைபெற்ற ஏர் ஷோவில், ரஷ்யா தனது ஏற்றுமதிக்கான Su-57E விமானத்தை உலக நாடுகளுக்கு அறிமுகப்படுத்தியது.

அந்த நிகழ்வில் பேசிய ரஷ்ய அதிகாரிகள், தொழில்நுட்ப பரிமாற்றத்துடன் கூடிய வகையில் Su-57E போர் விமானத்தை இந்தியாவுக்கு வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்தனர். மேலும், இந்த விமானத்தை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய தேவையான ஒத்துழைப்பையும் வழங்க முடியும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

Su-57E போர் விமானத்தில்,

🔹 மேம்படுத்தப்பட்ட ஆயுத அமைப்புகள்

🔹 நவீன ஸ்டெல்த் தொழில்நுட்பம்

🔹 அதிநவீன என்ஜின்

🔹 செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான அமைப்புகள்

🔹 சிறப்பு ரேடார் தொழில்நுட்பம்

உள்ளடக்கப்பட்டுள்ளன. அதோடு, இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களையும் இந்த விமானத்தில் ஒருங்கிணைக்கலாம் என்றும் ரஷ்யா அறிவித்துள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவின் யுனைடெட் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் (OAK) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி வாடிம் படேகா (Vadim Badekha), இந்தியாவுக்கு முழுமையான தொழில்நுட்ப பரிமாற்றம், விமான அமைப்புகளுக்கான source code (மூலக் குறியீடுகள்) மற்றும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதற்கான நடைமுறைகள் வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

Su-57E விமானம் 40 முதல் 50 ஆண்டுகள் வரை செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், பல தசாப்தங்களாக சேவையில் இருந்து, வான்வழிப் போரில் ஏற்படும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தன்னைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ளும் திறன் கொண்டதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்த விமானம் எதிர்காலத்தில் ஆளில்லா விமானங்கள் (drones) அடங்கிய குழுக்களை வழிநடத்தும் “Command & Control Centre” ஆகவும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப்படையின் நீண்டகால தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய ஒரே ஐந்தாம் தலைமுறை போர் விமானம் Su-57E தான் என்றும், இது வெறும் விமானக் கொள்முதல் அல்ல; இந்தியாவின் எதிர்கால வான்வழிப் போர் திறனை உறுதிப்படுத்தும் முழுமையான தொழில்நுட்ப சூழல் அமைப்பாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

2060ஆம் ஆண்டு வரையிலும் இந்திய விமானப்படையின் தேவைகளை கருத்தில் கொண்டு Su-57E வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் AMCA (Advanced Medium Combat Aircraft) திட்டம் இன்னும் வளர்ச்சி நிலையில் இருப்பதும், MRFA (Multi-Role Fighter Aircraft) டெண்டர் நடைமுறையில் இருப்பதும் காரணமாக, Su-57E இந்தியாவுக்கு உடனடியாகக் கிடைக்கக்கூடிய ஒரு வலுவான தீர்வாக பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.

முன்னதாக, இந்தியா–ரஷ்யா இணைந்து செயல்பட்ட FGFA (Fifth Generation Fighter Aircraft) திட்டத்தில், இந்தியாவுக்கென இரண்டு இருக்கைகள் கொண்ட விமானம் உருவாக்கப்பட வேண்டுமென திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், 2018ஆம் ஆண்டு இந்தியா அந்தத் திட்டத்திலிருந்து விலகியது. இருப்பினும், தற்போதைய Su-57E, 2010ல் முதன்முதலில் பறந்த T-50 முன்மாதிரி விமானத்திலிருந்து முற்றிலும் மேம்படுத்தப்பட்டதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

23வது இந்தியா–ரஷ்யா ஆண்டு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வந்தபோது, Su-57E போர் விமானம் மற்றும் அடுத்த தலைமுறை S-500 வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியாவுக்கு விற்கும் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின.

கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவுக்கான ரஷ்யாவின் ஆயுத ஏற்றுமதி 36 சதவீதமாக குறைந்துள்ளது. இது 2010–2014 காலகட்டத்தில் 72 சதவீதமாக இருந்தது. அமெரிக்காவின் பொருளாதார தடைகள் மற்றும் சர்வதேச அரசியல் அழுத்தங்களை எதிர்கொள்வதற்காக, இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த ரஷ்யா முயற்சி மேற்கொண்டு வருகிறது.

அந்த முயற்சியின் ஒரு பகுதியாகவே, தொழில்நுட்ப பரிமாற்றத்துடன் கூடிய Su-57E போர் விமானத்தை இந்தியாவிலேயே தயாரிக்கும் திட்டத்தை ரஷ்யா முன்வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

விளம்பர அரசியல் மட்டும் : முடிவடையாத “போர் நிறுத்தம்”

விளம்பர அரசியல் மட்டும் : முடிவடையாத “போர் நிறுத்தம்” இந்தியா – பாகிஸ்தான்...

இன்டர்நெட் கேபிளை பிடித்து 60 அடி மேம்பாலத்திலிருந்து கீழே பாய்ந்த இளைஞர்!

இன்டர்நெட் கேபிளை பிடித்து 60 அடி மேம்பாலத்திலிருந்து கீழே பாய்ந்த இளைஞர்! சென்னை...

ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் குவிப்பு : 1.71 லட்சத்துக்கும் மேல் இன்னும் நிலுவை

ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் குவிப்பு : 1.71 லட்சத்துக்கும் மேல் இன்னும்...

ஜனவரி 6ல் தமிழக அமைச்சரவை கூட்டம் – முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு

ஜனவரி 6ல் தமிழக அமைச்சரவை கூட்டம் – முக்கிய முடிவுகள் எடுக்கப்பட...