மாற்றங்களின் வேக ரயிலில் பயணிக்கும் இந்தியா – பிரதமர் மோடி உற்சாகம்
இந்தியா தற்போது சீர்திருத்தங்களைக் கொண்டு செல்லும் அதிவேக ரயிலில் பயணத்தைத் தொடங்கியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமையுடன் தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டில் நாட்டில் நடைமுறைக்கு வந்துள்ள மாற்றங்கள் குறித்து அவர் சமீபத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்ட புதிய சீர்திருத்த நடவடிக்கைகள், இந்தியாவின் முன்னேற்றப் பாதைக்கு புதிய ஊக்கத்தை வழங்கியுள்ளதாகவும், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கை அடைய இவை முக்கிய பங்கு வகுக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
ஜிஎஸ்டி வரி விகிதங்களில் செய்யப்பட்ட தளர்வுகள், ஆண்டு வருமானம் 12 லட்சம் ரூபாய் வரை உள்ளவர்களுக்கு வருமான வரி விலக்கு, 100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக விரிவுபடுத்தியது போன்ற முக்கிய முடிவுகளை எடுத்துக்காட்டிய அவர், இந்தியா தற்போது சீர்திருத்தங்களின் எக்ஸ்பிரஸில் வேகமாக முன்னேறி வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.