கும்பகோணம் தாராசுரம் ஐராவதேஸ்வரர் ஆலயத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வழிபாடு
தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தனது துணைவியுடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
கும்பகோணத்திற்கு வருகை தந்த அமைச்சர் ஜெய்சங்கர், அங்கிருந்து தாராசுரம் பகுதியில் உள்ள உலகப் பாரம்பரிய சிறப்புமிக்க ஐராவதேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்றார். அங்கு கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு உரிய மரியாதைகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து அவர் ஆலயத்தில் இறைவனை பக்தியுடன் வணங்கினார். பின்னர், கோயிலில் அமைந்துள்ள சிற்பங்களின் வரலாறு மற்றும் கலைநயங்கள் குறித்து தொல்லியல்துறை அதிகாரிகளிடம் விரிவாக கேட்டறிந்தார்.