சிலிகுரி வழித்தடத்தை உறுதிப்படுத்த வேண்டிய தருணம் இதுதான் – சத்குரு ஜக்கி வாசுதேவ்

Date:

சிலிகுரி வழித்தடத்தை உறுதிப்படுத்த வேண்டிய தருணம் இதுதான் – சத்குரு ஜக்கி வாசுதேவ்

மேற்கு வங்கத்தில் அமைந்துள்ள சிலிகுரி பகுதியை உடனடியாக வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் புவியியல் அமைப்பில் முக்கியமான பகுதியாக விளங்கும், ‘சிக்கன் நெக்’ என அழைக்கப்படும் சிலிகுரி வழித்தடத்தை துண்டிப்பதாக வங்கதேசத்தின் தற்காலிக அரசு கருத்து தெரிவித்துள்ளது. இதையடுத்து நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், இந்த விவகாரம் தொடர்பாக சத்குருவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “சிலிகுரி பகுதிக்கு தேவையான அனைத்தையும் செய்து, அதை உறுதியாகப் பாதுகாக்க வேண்டிய காலம் இதுதான்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்தப் பிரச்சினை 1971-ஆம் ஆண்டிலேயே தீர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், தற்போது நாட்டின் இறையாண்மைக்கு நேரடியான அச்சுறுத்தல் வெளிப்படையாக முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சிக்கலை சிறிதாகக் கருதி அலட்சியம் செய்யக் கூடாது என்றும் அவர் கூறினார்.

“இந்தக் கோழிக்கு ஊட்டமளித்து, அது ஒரு யானையாக வளர அனுமதிக்கும் நேரம் இது” என உவமையுடன் சத்குரு எச்சரிக்கை விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

நீதிமன்ற தீர்ப்பை மீறி சாதியற்ற சான்றிதழ் வழங்கப்படவில்லை – நெல்லை

நீதிமன்ற தீர்ப்பை மீறி சாதியற்ற சான்றிதழ் வழங்கப்படவில்லை – நெல்லை வருவாய்துறைக்கு...

கும்பகோணம் தாராசுரம் ஐராவதேஸ்வரர் ஆலயத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வழிபாடு

கும்பகோணம் தாராசுரம் ஐராவதேஸ்வரர் ஆலயத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வழிபாடு தஞ்சாவூர் மாவட்டத்தில்...

வைகுண்ட ஏகாதசி விழா – திருப்பதி திருமலையில் பரமபத வாசல் திறப்பு விமரிசை

வைகுண்ட ஏகாதசி விழா – திருப்பதி திருமலையில் பரமபத வாசல் திறப்பு...

வங்கதேச அரசுக்கு 24 நாள் காலக்கெடு விதித்த மாணவர் அமைப்பு

வங்கதேச அரசுக்கு 24 நாள் காலக்கெடு விதித்த மாணவர் அமைப்பு வங்கதேசத்தில் ஷெரீஃப்...