திருப்பரங்குன்றம் மலைச் சிகரத்தில் தீபம் ஏற்றுவது பூரண சந்திரனுக்கு வழங்கும் உண்மையான மரியாதை – மத்திய அமைச்சர் எல்.முருகன்
வழிபாட்டு சுதந்திரத்தை திமுக அரசு காலடியில் நசுக்கி வருகிறது என மத்திய அமைச்சர் எல்.முருகன் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மதுரை நரிமேடு பகுதியில் வசித்த பூரண சந்திரனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த மத்திய அமைச்சர் எல்.முருகன், அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பூரண சந்திரனின் தற்கொலை சம்பவத்திற்கு தமிழக அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதுதான் அவருக்கு நாம் செலுத்தும் உயரிய மரியாதை என்றும் தெரிவித்தார்.
மேலும், பூரண சந்திரனின் மறைவுக்கு இரங்கல் கூட தெரிவிக்காத திமுக அரசுக்கு, வரவிருக்கும் தேர்தலில் தமிழக மக்கள் உரிய பதிலடி வழங்குவார்கள் எனவும் எல்.முருகன் கூறினார்.