திமுக மகளிர் அணி மாநாட்டுக்காக பேருந்துகள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் பாதிப்பு – அண்ணாமலை குற்றச்சாட்டு
கோவை பல்லடத்தில் நடைபெற்ற திமுக மகளிர் அணி மாநாட்டில் பங்கேற்பாளர்களை அழைத்து வர அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பயன்படுத்தப்பட்டதால், பல்லடம் மற்றும் உடுமலை பேருந்து நிலையங்களில் பொதுப் பயணிகள் கடுமையான சிரமங்களை சந்தித்ததாக பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து ஆட்சிப் பொறுப்பை அளித்ததற்கான விளைவுகளை மக்கள் தற்போது அனுபவித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திமுக ஆட்சியில் இருந்து நிரந்தரமாக வெளியேறும் காலம் மிக அருகிலேயே வந்துவிட்டதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.