• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, ஏப்ரல் 25, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Spirituality

சபரிமலையில் தரிசனம் செய்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

athibantv by athibantv
அக்டோபர் 22, 2025
in Spirituality
0
📢 WhatsApp Channel Join
👁️ 859 📋

சபரிமலையில் தரிசனம் செய்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று இருமுடி கட்டி, 18 படிகள் ஏறி பக்தியுடன் தரிசனம் செய்தார். அவருக்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டது.

சபரிமலைக்கு தரிசனத்திற்காக வந்த முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமை திரவுபதி முர்முவுக்கு சேர்கிறது.

Related posts

சபரிமலை வழக்கு: “மத நம்பிக்கையைச் சோதிப்பது நீதிமன்றத்தின் வேலையல்ல” – உச்சநீதிமன்றம் முக்கியக் கருத்து!

சபரிமலை வழக்கு: “மத நம்பிக்கையைச் சோதிப்பது நீதிமன்றத்தின் வேலையல்ல” – உச்சநீதிமன்றம் முக்கியக் கருத்து!

ஏப்ரல் 25, 2026
கும்பகோணம் சாரங்கபாணி கோவில் சித்திரை தேரோட்டம்: ஏப்ரல் 30-ல் ‘சித்திரைத் தேர்’ பவனி!

கும்பகோணம் சாரங்கபாணி கோவில் சித்திரை தேரோட்டம்: ஏப்ரல் 30-ல் ‘சித்திரைத் தேர்’ பவனி!

ஏப்ரல் 24, 2026

தரிசனத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தேவசம் போர்டு சார்பில் செய்யப்பட்டிருந்தன. நேற்று மாலை டெல்லியில் இருந்து தனியார் விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த அவர், விமான நிலையத்தில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் மற்றும் முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரால் வரவேற்கப்பட்டார்.

இன்று காலை 9.35 மணிக்கு திரவுபதி முர்மு விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் சபரிமலை நோக்கிப் புறப்பட்டார். நிலக்கல்லில் இறங்கி, அங்கிருந்து கார் மூலம் பம்பை சென்ற அவர், கணபதி கோயிலில் இருமுடி கட்டி, ஜீப் மூலம் சந்நிதானத்தை அடைந்தார்.

அங்கு தேவசம் போர்டு அதிகாரிகள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்று, மூத்த சாந்தி அருண்குமார் நம்பூதிரி தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தினார். பின்னர் சந்தனப் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாளிகைப் புரத்தம்மன் கோயிலிலும் குடியரசுத் தலைவர் வழிபாடு செய்தார்.

தரிசனம் முடிந்ததும், திரவுபதி முர்மு பம்பை திரும்பி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டார்.

அவரது வருகையை முன்னிட்டு, சபரிமலையில் பக்தர்களுக்கு தற்காலிக நுழைவு தடை விதிக்கப்பட்டது. தரிசனம் முடிந்தபின் மட்டுமே பொதுப் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

மாதாந்திர வழிபாடு நிறைவடைந்ததால், இன்று இரவு நடை சாத்தப்பட்டு, அடுத்த மண்டல பூஜைக்காக நவம்பர் 16-ம் தேதி நடை திறக்கப்படும் என தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Spirituality
Previous Post

ஆஸ்திரேலியா தொடர் — ரோஹித், கோலியின் எதிர்காலம் குறித்து ரிக்கி பாண்டிங் கருத்து

Next Post

“மகசூல் நல்லா கிடைத்தா கூட பலன் இல்லை!” — டெல்டா விவசாயிகளின் வேதனை

Next Post

“மகசூல் நல்லா கிடைத்தா கூட பலன் இல்லை!” — டெல்டா விவசாயிகளின் வேதனை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
சபரிமலை வழக்கு: “மத நம்பிக்கையைச் சோதிப்பது நீதிமன்றத்தின் வேலையல்ல” – உச்சநீதிமன்றம் முக்கியக் கருத்து!

சபரிமலை வழக்கு: “மத நம்பிக்கையைச் சோதிப்பது நீதிமன்றத்தின் வேலையல்ல” – உச்சநீதிமன்றம் முக்கியக் கருத்து!

ஏப்ரல் 25, 2026
இன்று தங்கம் விலை சற்று குறைவு…

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

ஏப்ரல் 25, 2026
ராமேஸ்வரத்தில் பரபரப்பு: ஏஜெண்டுகள் இல்லாதபோது EVM பேட்டரி அகற்றம்? – தேர்தல் அதிகாரியை முற்றுகையிட்ட கட்சியினர்!

ராமேஸ்வரத்தில் பரபரப்பு: ஏஜெண்டுகள் இல்லாதபோது EVM பேட்டரி அகற்றம்? – தேர்தல் அதிகாரியை முற்றுகையிட்ட கட்சியினர்!

ஏப்ரல் 25, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • சபரிமலை வழக்கு: “மத நம்பிக்கையைச் சோதிப்பது நீதிமன்றத்தின் வேலையல்ல” – உச்சநீதிமன்றம் முக்கியக் கருத்து!
  • இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:
  • ராமேஸ்வரத்தில் பரபரப்பு: ஏஜெண்டுகள் இல்லாதபோது EVM பேட்டரி அகற்றம்? – தேர்தல் அதிகாரியை முற்றுகையிட்ட கட்சியினர்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

சபரிமலை வழக்கு: “மத நம்பிக்கையைச் சோதிப்பது நீதிமன்றத்தின் வேலையல்ல” – உச்சநீதிமன்றம் முக்கியக் கருத்து!

சபரிமலை வழக்கு: “மத நம்பிக்கையைச் சோதிப்பது நீதிமன்றத்தின் வேலையல்ல” – உச்சநீதிமன்றம் முக்கியக் கருத்து!

ஏப்ரல் 25, 2026
இன்று தங்கம் விலை சற்று குறைவு…

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

ஏப்ரல் 25, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN