திருவண்ணாமலையில் உள்ளூர் மக்களுக்கு கட்டுப்பாடு – வெளிமாநில கார்களுக்கு மட்டும் கோயில் வரை அனுமதியா? ராஜாராம் கேள்வி

Date:

திருவண்ணாமலையில் உள்ளூர் மக்களுக்கு கட்டுப்பாடு – வெளிமாநில கார்களுக்கு மட்டும் கோயில் வரை அனுமதியா?
தமிழக முன்னேற்றக் கழக தலைவர் ராஜாராம் கேள்வி

திருவண்ணாமலையில் உள்ளூர் வாசிகளின் கார்களுக்கு பல்வேறு போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிமாநில பதிவெண் கொண்ட கார்கள் மட்டும் கோயில் வரை அனுமதிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம் என தமிழக முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ராஜாராம் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவண்ணாமலையில் நடைபெற்ற தமிழக முன்னேற்றக் கழக மாநில நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜாராம், மாவட்டத்தில் நிலவும் பல்வேறு நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

அப்போது பேசிய அவர், “திருவண்ணாமலையில் கிரிவலம் மற்றும் கோயில் பகுதியைச் சுற்றி உள்ளூர் மக்களின் கார்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தமிழ்நாடு பதிவெண் கொண்ட வாகனங்கள் பல இடங்களில் நிறுத்த அனுமதி மறுக்கப்படுவதோடு, கோயில் வரை செல்லவும் தடைகள் விதிக்கப்படுகின்றன. ஆனால், வெளிமாநில பதிவெண் கொண்ட கார்களுக்கு மட்டும் எந்த தடையும் இல்லாமல் கோயில் வரை செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. இது எப்படி நியாயம்?” எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், “உள்ளூர் மக்களே தங்கள் சொந்த ஊரில் வாகனங்களை பயன்படுத்த முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் சில வாகனங்களுக்கு மட்டும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவது, நிர்வாகத்தின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது” என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

திருவண்ணாமலையில் போக்குவரத்து ஒழுங்குமுறை என்ற பெயரில் பொதுமக்கள் தேவையற்ற சிரமங்களுக்கு ஆளாகி வருவதாகவும், குறிப்பாக மூத்த குடிமக்கள், பெண்கள் மற்றும் அவசர தேவைகளுக்காக வருபவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் ராஜாராம் தெரிவித்தார்.

இதற்கு உடனடியாக மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், உள்ளூர் மக்களுக்கும் வெளிமாநில பயணிகளுக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

திருவண்ணாமலை போன்ற முக்கிய ஆன்மிகத் தலத்தில், நிர்வாகத் தவறுகள் பக்தர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே வேறுபாடு ஏற்படுத்தக் கூடாது என்றும், அனைவருக்கும் சமமான அணுகுமுறை அவசியம் என்றும் தமிழக முன்னேற்றக் கழகம் சார்பில் அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு – பக்தர்கள் பாதுகாப்புடன் கலந்து கொள்ள விழிப்புணர்வு!

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு – பக்தர்கள் பாதுகாப்புடன்...

உலகளவில் ரூ.1050 கோடி வசூலித்த ரன்வீர் சிங் திரைப்படம் ‘துரந்தர்’

உலகளவில் ரூ.1050 கோடி வசூலித்த ரன்வீர் சிங் திரைப்படம் ‘துரந்தர்’ புதுதில்லி: நடிகர்...

தமிழகம், புதுச்சேரிக்கு அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் – குடியரசு துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்

தமிழகம், புதுச்சேரிக்கு அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் – குடியரசு...

200 மில்லியன் ஆண்டுகளில் பூமியில் ஒரு நாள் 25 மணி நேரமாகும் – விஞ்ஞானிகள் கணிப்பு

இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளில் பூமியில் ஒரு நாள் 25 மணி...