இந்தியாவில் ரூ.668 கோடி வருவாய் ஈட்டிய ‘துரந்தர்’ திரைப்படம்!
நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ள ‘துரந்தர்’ திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்து வருகிறது.
ஆதித்யா தர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரன்வீர் சிங் உடன் அக்ஷய் கன்னா, மாதவன், சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பாகிஸ்தானில் ரகசிய உளவுப் பணியில் ஈடுபடும் இந்திய ராணுவ வீரரை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், பல உண்மை நிகழ்வுகள் மற்றும் நிஜ மனிதர்களின் கதைகளை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்துள்ளது.
திரையரங்குகளில் வெளியான 23 நாட்களுக்குள், இந்திய சந்தையில் மட்டும் இந்தப் படம் ரூ.668 கோடியைத் தாண்டிய வருவாயை பெற்றுள்ளதாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.