ஏற்காட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் – சுற்றுலாப் பயணிகள் அவதி
சேலம் மாவட்டத்திற்குட்பட்ட ஏற்காட்டில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால், பலரும் சாலைகளில் நீண்ட நேரம் சிக்கி பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, ஏற்காட்டிற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா ஆர்வலர்கள் வருகை தந்தனர். இதனால் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து, முக்கிய சாலைகள் அனைத்திலும் கடும் நெரிசல் உருவானது.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக வாகனங்கள் ஒரே இடத்தில் நகர முடியாமல் நின்றதால், சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். இதன் காரணமாக பலர் அனைத்து சுற்றுலா இடங்களையும் பார்வையிட முடியாமல் மனவருத்தமடைந்தனர்.
எனவே, விடுமுறை நாட்களில் ஏற்படும் போக்குவரத்து பிரச்சனைகளை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்கூட்டியே உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.