பொங்கல் பரிசுத் தொகுப்பில் மஞ்சளையும் சேர்க்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் கோரிக்கை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு கரும்பு வழங்கப்படுவது போல, மஞ்சள் கிழங்கையும் தமிழக அரசு வழங்க வேண்டும் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் மஞ்சளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்து, பின்னர் அதை நிறைவேற்றாமல் விவசாயிகளை ஏமாற்றியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அந்த வாக்குறுதியை மீறியதற்கான நிவாரணமாக, விவசாயிகளிடமிருந்து மஞ்சளை அரசே நேரடியாக கொள்முதல் செய்து, பொங்கல் பரிசுத் தொகுப்பில் மஞ்சள் கிழங்கை சேர்க்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.