நீலகிரி: அடிப்படை வசதிகள் கேட்டு பழங்குடி மக்கள் மனு
நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே வாழும் பழங்குடி சமூக மக்கள் அடிப்படை வசதிகளை வழங்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அய்யன் கொல்லி, பன்னிக்கல் போன்ற கிராமங்களில் அதிகளவில் பழங்குடி மக்கள் வசிப்பதால், அந்த பகுதிகளில் தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனக் கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் அப்பகுதி மக்கள் தங்கள் குறைகளை முன் வைத்தனர்.