தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் ஒப்பந்த செவிலியர்கள் 6வது நாளாக காத்திருப்பு போராட்டம்
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியில் உள்ள செவிலியர்கள், எட்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மருத்துவத் தேர்வு வாரியத்தின் தேர்வின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட இந்த செவிலியர்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேனி அரசு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கும் நடவடிக்கைகள், மற்றும் சென்னையில் செவிலியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து, செவிலியர்கள் கோஷம் தெரிவித்துள்ளனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.