தனியாருக்குச் சொந்தமான நிலத்தை கைப்பற்றியதாக திமுக கவுன்சிலர் மீது புகார்
திருச்சி மாவட்டத்தில் 1.22 சென்ட் அளவுள்ள தனிநபருக்குச் சொந்தமான நிலத்தை திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் சட்டவிரோதமாக கைப்பற்றியுள்ளதாகக் கூறி, பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளார்.
ஓலையூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் இர்பான் என்பவர், தனது சொந்த நிலத்தை திமுக கவுன்சிலர் காஜாமலை விஜய் அத்துமீறி ஆக்கிரமித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். நிலம் தொடர்பாக விளக்கம் கேட்டால், மிரட்டல் விடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும், நிலத்தை மீட்க காவல்துறை நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும், இதனால் தமக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் இர்பான் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.