எடப்பாடி தொகுதியில் நிறைவடைந்த வளர்ச்சிப் பணிகளைத் திறந்து வைத்தார் எடப்பாடி பழனிசாமி!
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் நிறைவடைந்த பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ. 3 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள புதிய பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
இதனைத் தொடர்ந்து, எடப்பாடி தொகுதிக்குட்பட்ட நெடுங்குளம், வெள்ளரிவெள்ளி, இருப்பாளி, சித்தூர், வீரக்கல், கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள் மற்றும் அரசுப் பள்ளி வளாகத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை அவர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
மேலும், எதிர்காலத்தில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், வறண்ட நிலையில் உள்ள 100 ஏரிகளை நிரப்பும் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.