அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு எதிராக திமுக அரசு செயல்படுகிறது
மத்திய அரசின் முத்ரா கடன் திட்டம் குறித்து பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தாத திமுக அரசு, அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிரான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருவதாக பாஜக மாநில நிர்வாகி ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற பாஜக மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்த ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, அமைப்பு சாரா தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருவதாக கூறினார். ஆனால் அந்த திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு தகவல் பரப்ப திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் புறக்கணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.