100 வயதிலும் தடகள சாதனை – காரைக்குடியில் அசத்திய தஞ்சை முதியவர்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டிகளில், 100 வயதுடைய தஞ்சை முதியவர் பங்கேற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த போட்டிகளில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மூத்த குடிமக்கள் கலந்து கொண்டனர். இதில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 100 வயதான விவசாயி நாடிமுத்து, தடகள போட்டிகளில் பங்கேற்று கவனம் ஈர்த்தார்.
நாடிமுத்து 100 மீட்டர் ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு தனது உடல் திறனை வெளிப்படுத்தினார். அவரது உற்சாகமும் தன்னம்பிக்கையும் அங்கு வந்திருந்தவர்களை பெரிதும் கவர்ந்தது.
100 வயதிலும் விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபட்ட நாடிமுத்துவை பார்த்து வியந்த பலர், அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.