நெல்லை நிகழ்ச்சியில் முதல்வரின் பாதையை கடந்த நாய் – பாதுகாப்பு ஏற்பாடுகள் கேள்விக்குறி
நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முன்பாக நாய் ஒன்று குறுக்கே சென்ற சம்பவம், அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
நெல்லை மாவட்டத்திற்கு சென்றிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், மறைந்த முன்னாள் யூனியன் சேர்மன் தங்கப்பாண்டியனின் உருவப் படத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்வின் போது, எதிர்பாராத வகையில் நாய் ஒன்று முதலமைச்சரின் பாதையை கடந்து சென்றது.
இந்த சம்பவம் நிகழ்ந்த தருணத்தில், ஒரு விநாடி நேரம் முதலமைச்சர் ஸ்டாலின் அங்கேயே நின்றதாகக் கூறப்படுகிறது.
நாடு முழுவதும் தெரு நாய்களின் பிரச்சனை பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் நிலையில், முதல்வரின் பாதுகாப்பு வளையத்திற்குள் நாய் நுழைந்தது, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விமர்சனங்களை எழுப்பியுள்ளது.