டயர் வெடிப்பால் கட்டுப்பாட்டை இழந்த கார் – தொடர் விபத்தில் 5 பேர் காயம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே, காரின் டயர் திடீரென வெடித்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தாறுமாறாக ஓடி, அடுத்தடுத்து ஐந்து வாகனங்கள் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையிலிருந்து காரைக்குடி நோக்கி சென்றுகொண்டிருந்த அந்த கார், உளுந்தூர்பேட்டை அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக டயர் வெடித்து சாலையின் தடுப்பில் மோதியது. பின்னர், எதிர்திசை சாலையில் நின்ற அந்த காரைத் தொடர்ந்து வந்த வாகனங்கள் கவனிக்காமல் மோதியதால் தொடர் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் மூன்று கார்கள் மற்றும் இரண்டு லாரிகள் சேதமடைந்ததுடன், ஐந்து பேர் கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக இடத்திற்கு சென்று, காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.