காப்பீட்டு தொகைக்காக தந்தையை கொன்ற மகன்கள் – 6 பேர் கைது
திருத்தணி அருகே, காப்பீட்டு தொகையை கைப்பற்றும் நோக்கில் தந்தையையே விஷப் பாம்பை பயன்படுத்தி கொலை செய்த இரண்டு மகன்கள் உள்ளிட்ட ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை பகுதியில் உள்ள நல்லதண்ணீர் குளத்தைச் சேர்ந்த கணேசன், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார்.
கடந்த நாட்களில், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கணேசன், கட்டுவிரியன் பாம்பு கடித்ததில் உயிரிழந்ததாக அவரது மகன்கள் காப்பீட்டு நிறுவனத்திடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த மரணம் குறித்து சந்தேகம் எழுந்ததால், காப்பீட்டு நிறுவனம் காவல்துறையில் புகார் அளித்தது. அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காப்பீட்டு பணத்தைப் பெறுவதற்காகத் திட்டமிட்டு விஷப் பாம்பை ஏவித் தந்தையை கொலை செய்தது வெளிச்சத்திற்கு வந்தது.