தமிழகம், புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் – தமிழிசை சௌந்தரராஜன்
தமிழகத்திலும் புதுச்சேரியிலும் எதிர்வரும் காலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியாக ஆட்சியைப் பிடிக்கும் என்று பாஜக மூத்த தலைவி தமிழிசை சௌந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை மீனம்பாக்கம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் வருகை தமக்கு பெரும் மகிழ்ச்சியை அளிப்பதாகக் கூறினார். மேலும், அவரது தமிழகம் வருகை அரசியல் ரீதியாக மிக முக்கியமானதாக கருதப்படுவதாகவும் தெரிவித்தார்.
இந்த வருகையின் தொடர்ச்சியாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்ற உறுதியான நம்பிக்கையையும் தமிழிசை சௌந்தரராஜன் வெளிப்படுத்தினார்.