மே மாதத்திற்குப் பின் திமுக ஆட்சி முடிவுக்கு வரும் – எல். முருகன்
திருப்பரங்குன்றம் சம்பவத்தில் தீக்குளித்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தாரிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடியாக மன்னிப்பு கோர வேண்டும் என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 80 சதவீதம் வரை திமுக அரசு நிறைவேற்றத் தவறியுள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும், வரவிருக்கும் மே மாதத்திற்குப் பிறகு திமுக ஆட்சியில் இருந்து விலகுவது தவிர்க்க முடியாதது எனவும் கூறினார்.
பீகாரில் கிடைத்த அரசியல் வெற்றி தமிழக அரசியலிலும் பிரதிபலிக்கும் என்றும், திருப்பரங்குன்றம் சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு முழுப் பொறுப்பும் மாநில அரசுக்கே உண்டு என்றும் எல். முருகன் தெரிவித்தார்.
அந்த சம்பவத்தில் தீக்குளித்து உயிர் இழந்த இளைஞரின் குடும்பத்தாரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.