பெண் நிர்வாகி வீட்டில் சிக்கிய நாமக்கல் கிழக்கு மாவட்ட தவெக நிர்வாகி – வீடியோ பரவல்
நாமக்கல் கிழக்கு மாவட்ட தவெக அமைப்பின் நிர்வாகி ஒருவர், பெண் நிர்வாகியின் வீட்டில் பிடிபட்டதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட தவெக செயலாளராக பணியாற்றி வருபவர் செந்தில்நாதன். இவர், கூட்டப்பள்ளி பகுதியில் வசிக்கும் பெண் நிர்வாகி ஒருவரின் வீட்டிற்கு சென்ற நிலையில், வீட்டின் கதவை உள்ளிருந்து பூட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விவரம் பெண்ணின் உறவினர்களுக்கு தெரிய வந்ததையடுத்து, அவர்கள் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு வந்து கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.
அப்போது, அந்த வீட்டுக்குள் செந்தில்நாதன் மற்றும் பெண் நிர்வாகி இருவரும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், அந்த பெண்ணை தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.