தருமபுரி மாவட்டம்: வாக்காளர் பட்டியலில் 6.34% பேர் நீக்கம்
தருமபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில், அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான சதீஸ் வெளியிட்டார்.
பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய வகையில் இந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தப் பணிகள் முடிவடைந்ததையடுத்து வெளியிடப்பட்டுள்ள பட்டியலின்படி, தருமபுரி மாவட்டத்தில் மொத்தமாக 12 லட்சத்து 3 ஆயிரத்து 917 வாக்காளர்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளின் போது, தகுதி இல்லாதவர்கள், இரட்டைப் பதிவுகள் மற்றும் பிற காரணங்களால் மொத்த வாக்காளர்களில் 6.34 சதவீதம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.