உதகையில் சாக்லேட் திருவிழா உற்சாகமாக தொடக்கம்!
நீலகிரி மாவட்டத்தின் தலைநகரான உதகையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு, தனியார் சாக்லேட் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் சாக்லேட் திருவிழா விமரிசையாக ஆரம்பமானது.
ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைக் காலத்தை வரவேற்கும் விதமாக நடத்தப்படும் இந்த சாக்லேட் திருவிழா, இவ்வாண்டு 16-ஆவது முறையாக நடைபெறுகிறது. இந்த விழாவில், நீலகிரி தேன், வனப்பூக்கள், ஊட்டி மலை நெல்லிக்காய், நீலகிரி தேயிலை, குறிஞ்சி மூலிகை கல் உப்பு, மலை மிளகு, வனங்களில் கிடைக்கும் காளான் உள்ளிட்ட இயற்கை பொருட்களை பயன்படுத்தி சாக்லேட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
அதேபோல், நீலகிரி மலைப்பகுதியில் விளையும் கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகளை அடிப்படையாகக் கொண்டு கேரட் சாக்லேட், பீட்ரூட் சாக்லேட், ரோஸ்மேரி சுவையுடன் கூடிய சாக்லேட் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட வகையான சாக்லேட்டுகள் உருவாக்கப்பட்டு கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.
குழந்தைகளை ஈர்க்கும் வகையில் பல வண்ணங்கள், வடிவங்கள் மற்றும் தனித்துவமான அலங்காரங்களுடன் சாக்லேட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளதால், விழாவிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.
இதன் காரணமாக, கண்காட்சியை பார்வையிடும் சுற்றுலாப் பயணிகள் சாக்லேட்டுகளை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்