விஜய் பொதுக்கூட்டத்தில் உயிரிழந்த 41 பேருக்காக தவெகவின் சார்பில் 16-ம் நாள் காரியம்

திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதி தவெகவினர், கரூரில் நடைபெற்ற விஜய் பிரச்சார கூட்டத்தில் உயிரிழந்த 41 பேரின் ஆத்மா சாந்திக்காக 16-ம் நாள் காரியம் நடத்தினர்.

இந்த நிகழ்வு துறையூர் விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோயிலில் நடைபெற்றது. புரோகிதர் தலைமையில் வேத மந்திரங்களுடன் பூஜை, யாகம் நடைபெற்றது. பின்னர் யாகத்தில் பயன்படுத்தப்பட்ட தர்ப்பை, கல் போன்றவை கோயில் குளத்தில் விடப்பட்டன.

மேலும், பிதுர்லோகத்தில் இருப்போருக்காக கவளப்பிண்டம் வைத்து பூஜைகள் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அவையும் கோயில் குளத்தில் கரைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், தவெக திருச்சி வடக்கு மாவட்ட இணைச் செயலாளர் மதன், துறையூர் தொகுதி பொறுப்பாளர்கள் கவியரசன், சதா, தெற்கு ஒன்றியச் செயலாளர் சுதாகர், கிழக்கு ஒன்றியச் செயலாளர் தர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Facebook Comments Box