ராகுல் காந்தி பயணம் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம்
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நேரத்தில் ஜெர்மனி சென்ற ராகுல் காந்தி, அங்கு கார்கள் மற்றும் பைக்குகளில் அமர்ந்து எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
டெல்லியில் வரும் 19ஆம் தேதி வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், அந்த கூட்டம் இன்னும் முடிவடையாத சூழலில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டிசம்பர் 15ஆம் தேதி ஜெர்மனிக்குப் பயணம் மேற்கொண்டார்.
இந்தப் பயணத்தின் போது பெர்லினில் உள்ள பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு சென்ற அவர், அங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் அமர்ந்து வீடியோ பதிவு செய்தார்.
அந்தக் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு விமர்சித்து வருகின்றனர்.