கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை – ஹெல்மெட் அணிந்த நபரை போலீசார் தேடல்
சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள அம்மன் கோயிலின் உண்டியலை உடைத்து பணத்தை அபகரித்துச் சென்ற, ஹெல்மெட் அணிந்த கொள்ளையனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நள்ளிரவு நேரத்தில் கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர், உண்டியலை சேதப்படுத்தி அதிலிருந்த பணத்தை திருடிச் சென்றதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கோயில் நிர்வாகம் புகார் அளித்த நிலையில், பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளியை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.