• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, மார்ச் 23, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

இமயமலையின் ஆழத்தில் மறைந்துள்ள அணுசக்தி கருவி : நீங்காத கதிர்வீச்சு அச்சம்

athibantv by athibantv
டிசம்பர் 16, 2025
in Bharat, Big-News
A A
0
👁️ 2.9K 🔥

இமயமலையின் ஆழத்தில் மறைந்துள்ள அணுசக்தி கருவி : நீங்காத கதிர்வீச்சு அச்சம்

சுமார் ஆறு தசாப்தங்களுக்கு முன் இமயமலைப் பகுதியில் தடம் மாறிய ஒரு அணுசக்தி சாதனம், இன்றளவும் விஞ்ஞானிகளிடையே கவலையை ஏற்படுத்தி வருகிறது. அந்த கருவி எதற்காக நிறுவப்பட்டது? அது எவ்வாறு காணாமல் போனது? அதன் பின்னணி குறித்து இச்செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

1962ஆம் ஆண்டு இந்தியா–சீனா இடையே நடைபெற்ற போர், இந்தியாவுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியது. அந்த மோதலில் இந்தியா பல பகுதிகளை இழந்ததுடன், பாதுகாப்பு ரீதியாகவும் பெரும் அழுத்தத்தை சந்தித்தது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, சீனா அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டது. இதன் மூலம், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு குறித்து புதிய அச்சம் உருவானது.

இந்த சூழ்நிலையில், எல்லைப் பகுதிகளில் சீனாவின் நடவடிக்கைகளைத் துல்லியமாக கண்காணிக்க வேண்டிய அவசியம் இந்திய அரசுக்கு ஏற்பட்டது. குறிப்பாக, அணு ஆயுத சோதனைகள் அல்லது ஏவுகணை இயக்கங்கள் நடைபெறுகிறதா என்பதை முன்கூட்டியே அறிய வழிகள் தேடப்பட்டன.

பல ஆலோசனைகளுக்குப் பிறகு, சீனா எல்லையை கண்காணிக்க இமயமலையில் ஒரு உயரமான சிகரத்தில் அணுசக்தியால் இயங்கும் கண்காணிப்பு கருவியை நிறுவ முடிவு செய்யப்பட்டது. இதற்காக உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள நந்தாதேவி சிகரம் தேர்வு செய்யப்பட்டது. இந்தியாவின் இரண்டாவது உயரமான மலைச்சிகரமான இதிலிருந்து சீனப் பகுதிகளை கண்காணிக்க முடியும் என கருதப்பட்டது.

இந்தத் திட்டத்திற்கு அமெரிக்காவின் உளவு அமைப்பான CIA தொழில்நுட்ப உதவியையும் வழங்கியது. திட்டமிட்டபடி, நந்தாதேவி சிகரத்தில் அந்தக் கருவி நிறுவப்பட்டது. அது RTG (Radioisotope Thermoelectric Generator) எனப்படும் அணுசக்தி மின்உற்பத்தி சாதனத்தின் மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

RTG என்பது ஒரு வகையான அணுக்கரு மின்கலமாகும். இதில் உள்ள கதிரியக்க ஐசோடோப் சிதைவடையும்போது உருவாகும் வெப்பம், மின்சாரமாக மாற்றப்படுகிறது. பெரும்பாலும் புளூட்டோனியம்-238 என்ற கதிரியக்கப் பொருள் இதற்குப் பயன்படுத்தப்படுகிறது. நேரடி மின்சார வசதி கிடைக்காத இடங்களில் நீண்ட காலம் மின்சாரம் வழங்க இந்த கருவி பயன்படுகிறது.

இவ்வகை RTG ஜெனரேட்டர்கள் விண்வெளி ஆய்வுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நாசா அனுப்பிய வாயேஜர் விண்கலங்களுக்கும், செவ்வாய் கிரகத்தில் செயல்படும் ரோவர்களுக்கும் இதே தொழில்நுட்பம் மின்சாரம் வழங்கி வருகிறது.

அதே முறையில்தான் நந்தாதேவி சிகரத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கருவியும் செயல்பட்டு வந்தது. ஆனால், சில ஆண்டுகள் கழித்து அந்த கருவியும், அதனுடன் இணைக்கப்பட்ட RTG ஜெனரேட்டரும் திடீரென மாயமானது. சிலர் அவை கடும் பனிப்பொழிவில் புதைந்திருக்கலாம் என்றனர். மற்றவர்கள் பனிச்சரிவு காரணமாக அவை அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என கூறினர். ஆனால், இதுவரை அவற்றின் இருப்பிடம் உறுதியாக கண்டறியப்படவில்லை.

இன்றளவும், அந்த அணுசக்தி கருவி நந்தாதேவி மலைத்தொடரின் ஏதோ ஒரு பகுதியில் புதைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இது விஞ்ஞானிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. காரணம், RTG ஜெனரேட்டர் வெடிக்காது என்றாலும், அதில் உள்ள கதிரியக்கப் பொருட்கள் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

குறிப்பாக, இமயமலையில் உருவாகும் நதிகள் வழியாக கதிரியக்கப் பொருட்கள் பரவினால், அது மனிதர்களுக்கும் இயற்கைக்கும் ஆபத்தை விளைவிக்கலாம் என்ற அச்சம் உள்ளது.

RelatedPosts

எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யப் பிரதமர் மோடி அதிரடி: டெல்லியில் அவசர உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்!

எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யப் பிரதமர் மோடி அதிரடி: டெல்லியில் அவசர உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்!

மார்ச் 22, 2026
ஐந்து மாநிலத் தேர்தல்: “வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்க” – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

ஐந்து மாநிலத் தேர்தல்: “வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்க” – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

மார்ச் 22, 2026
“24 ஆண்டுகளில் ஒருநாள் கூட விடுமுறை இல்லை”: பிரதமர் மோடியின் சேவைப் பயணத்தை வாழ்த்தி அமித் ஷா நெகிழ்ச்சி!

“24 ஆண்டுகளில் ஒருநாள் கூட விடுமுறை இல்லை”: பிரதமர் மோடியின் சேவைப் பயணத்தை வாழ்த்தி அமித் ஷா நெகிழ்ச்சி!

மார்ச் 22, 2026

இந்த அபாயத்தை உணர்ந்த விஞ்ஞானிகள், 1978ஆம் ஆண்டில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். நந்தாதேவி மலைப்பகுதியில் இருந்து உருவாகும் நீர்நிலைகளில் கதிர்வீச்சு தாக்கம் உள்ளதா என்பதை அவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, குறிப்பிடத்தக்க பாதிப்புகள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. இது அக்காலத்தில் ஓரளவு நிம்மதியை ஏற்படுத்தியது.

எனினும், அந்த RTG கருவி புதைக்கப்பட்டு இப்போது 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், அதன் தற்போதைய நிலை என்ன என்பது தெரியாததால், எதிர்காலத்தில் கதிரியக்க பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு முற்றிலும் மறுக்க முடியாது என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Related

Tags: Bharat
Previous Post

1971-ல் பாகிஸ்தானை முழுமையாக தோற்கடித்த இந்தியா : ‘விஜய் திவஸ்’ உருவான பின்னணி

Next Post

செய்தியாளர்களின் கேள்வியால் எரிச்சலடைந்த யோகி பாபு : கடுமையான பதில்

RelatedPosts

எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யப் பிரதமர் மோடி அதிரடி: டெல்லியில் அவசர உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்!

எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யப் பிரதமர் மோடி அதிரடி: டெல்லியில் அவசர உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்!

மார்ச் 22, 2026
ஐந்து மாநிலத் தேர்தல்: “வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்க” – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

ஐந்து மாநிலத் தேர்தல்: “வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்க” – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

மார்ச் 22, 2026
“24 ஆண்டுகளில் ஒருநாள் கூட விடுமுறை இல்லை”: பிரதமர் மோடியின் சேவைப் பயணத்தை வாழ்த்தி அமித் ஷா நெகிழ்ச்சி!

“24 ஆண்டுகளில் ஒருநாள் கூட விடுமுறை இல்லை”: பிரதமர் மோடியின் சேவைப் பயணத்தை வாழ்த்தி அமித் ஷா நெகிழ்ச்சி!

மார்ச் 22, 2026
அமெரிக்க ஆணையத்தின் அறிக்கைக்குப் பொய்மை – 275 முன்னாள் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் கடும் கண்டனம்!

அமெரிக்க ஆணையத்தின் அறிக்கைக்குப் பொய்மை – 275 முன்னாள் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் கடும் கண்டனம்!

மார்ச் 22, 2026
எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!

எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!

மார்ச் 22, 2026
டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

மார்ச் 21, 2026
Next Post
Home

செய்தியாளர்களின் கேள்வியால் எரிச்சலடைந்த யோகி பாபு : கடுமையான பதில்

Home

நடுக்கடலில் கவிழ்ந்த பைப்பர் படகு : உயிர் தப்பிய 4 மீனவர்கள்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமான செய்தி

1.21 லட்சம் நெல் மணிகளால் உருவான ‘ராம பரிவார்’: அயோத்தியில் ஒடிசா கலைஞர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் படைப்பு!

1.21 லட்சம் நெல் மணிகளால் உருவான ‘ராம பரிவார்’: அயோத்தியில் ஒடிசா கலைஞர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் படைப்பு!

மார்ச் 22, 2026
“மக்களுக்கு நீதி கிடைக்க உதவுங்கள்”: சென்னையில் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் நெகிழ்ச்சி உரை!

“மக்களுக்கு நீதி கிடைக்க உதவுங்கள்”: சென்னையில் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் நெகிழ்ச்சி உரை!

மார்ச் 22, 2026
பல்லாவரத்தில் அதிரடி: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 19 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பறிமுதல்!

பல்லாவரத்தில் அதிரடி: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 19 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பறிமுதல்!

மார்ச் 22, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • 1.21 லட்சம் நெல் மணிகளால் உருவான ‘ராம பரிவார்’: அயோத்தியில் ஒடிசா கலைஞர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் படைப்பு!
  • “மக்களுக்கு நீதி கிடைக்க உதவுங்கள்”: சென்னையில் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் நெகிழ்ச்சி உரை!
  • பல்லாவரத்தில் அதிரடி: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 19 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பறிமுதல்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.