திருப்பூர் : குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை கொட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள குடியிருப்பு பகுதிக்கு அருகில் குப்பைகள் கொட்டப்படுவதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் கைது செய்தனர்.
சின்னக்காளிபாளையம் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து குப்பைகள் குவிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிராக நீண்ட காலமாகக் குரல் எழுப்பி வந்த அப்பகுதி மக்கள், குப்பைகளை ஏற்றி வந்த லாரிகளை மறித்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சுற்றி வளைத்து கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.