மேட்டுப்பாளையம் நகராட்சியில் ஊழல் குற்றச்சாட்டு : பாஜக சார்பில் கண்டன போராட்டம்
மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம் ஊழலில் மூழ்கியுள்ளதாகக் குற்றம் சாட்டி, பாஜக கட்சியினர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் நகராட்சியில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படை வசதிகளை முறையாக நிறைவேற்றாமல், முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் கூறி, பாஜக சார்பில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நகர பாஜக தலைவர் சரவணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
அவர் தனது உரையில், “திராவிட மாடல் என்பது தோல்வியடைந்த மாடல், சோர்ந்த மாடல், தப்பிச் செல்லும் மாடல்” என பாடல் வடிவில் விமர்சித்து, நகராட்சி நிர்வாகத்தையும் தமிழக அரசையும் கடுமையாக சாடினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் அதிகமான பாஜக தொண்டர்கள் பங்கேற்று, எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர்.