துருக்கி கப்பல் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றச்சாட்டு
கருங்கடல் பகுதியில் துருக்கி நாட்டைச் சேர்ந்த கப்பல் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் மூன்று ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாகத் துருக்கி செயல்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில், தகவல் தொடர்பு மற்றும் இணைப்புகளை துண்டிக்கும் நோக்கில் துருக்கி கப்பலை இலக்காக வைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.