கேரளத்தில் பாஜக தேவை என்பதை மக்கள் உணரத் தொடங்கினர் – வானதி சீனிவாசன்
கேரள மாநில மக்களிடையே பாஜக அவசியம் என்ற எண்ணம் வலுப்பெறத் தொடங்கியுள்ளதை சமீபத்திய தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரளாவில் பாஜக மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்து வருவதை தேர்தல் வெற்றி தெளிவாக காட்டுகிறது என கூறினார்.
மேலும் திமுக ஊழலை ஊக்குவிக்கும் கட்சியாக செயல்பட்டு வருவதாக விமர்சித்த வானதி சீனிவாசன், சிறை சென்ற அமைச்சர்களை இன்னமும் பதவியில் வைத்திருப்பதற்கான காரணம் என்ன? என கேள்வி எழுப்பினார்.
செந்தில் பாலாஜி மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ஆதாரமற்றவை என யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், திமுகவுக்கு புகழ் சேர்ப்பதற்காகவே மகளிர் உரிமைத்தொகை திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.