பெரும்பிடுகு முத்தரையர் நினைவு தபால் தலை விழாவில் பங்கேற்பது பெருமை – நயினார் நாகேந்திரன்
பெரும்பிடுகு முத்தரையரின் நினைவாக வெளியிடப்பட்ட தபால் தலை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தமிழரான குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தபால் தலையை வெளியிட்டது தனிச்சிறப்பு வாய்ந்தது எனக் குறிப்பிட்டார்.
மேலும், தமிழகத்தின் வளர்ச்சிக்காக 14 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி ஒதுக்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது நன்றியை நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.