தாய்லாந்து – கம்போடியா மோதலுக்கு முற்றுப்புள்ளி : டிரம்ப் அறிவிப்பு
தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் இடையே நீடித்து வந்த ஆயுத மோதலை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தென் கிழக்கு ஆசியப் பகுதிகளில் அமைந்துள்ள தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளுக்கு இடையே, எல்லை தொடர்பான பிரச்சனை நூற்றாண்டுக்கும் மேலாக தீர்வு காணப்படாமல் இருந்து வருகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஏற்பட்ட கடும் மோதலில் 43 பேர் உயிரிழந்தனர். அதன் பின்னர், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால், கடந்த அக்டோபர் மாதத்தில் இரு நாடுகளுக்கும் இடையே அமைதி உடன்பாடு கையெழுத்தானது.
ஆனால் சமீபத்தில் அந்த அமைதி ஒப்பந்தத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் மீண்டும் தாக்குதல் நடத்தத் தொடங்கியதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், தாய்லாந்து – கம்போடியா நாடுகள் மீண்டும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.