நாகநாத சுவாமி கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு திருத்தேர் உற்சவம்
கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிறை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரம் அமைந்துள்ள நாகநாத சுவாமி ஆலயத்தில் திருத்தேர் ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது.
ராகு பகவானுக்குப் பிரதான தலமாக விளங்கும் இந்தப் பழமையான சிவாலயத்தில், கார்த்திகை கடைஞாயிறு திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாகநாத சுவாமியின் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவின் தொடர்ச்சியாக நடைபெற்ற தேரோட்டத்தில், நாகநாதர் உள்ளிட்ட ஐம்பெரும் தெய்வங்கள் அலங்கரிக்கப்பட்ட தேரில் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.