தெருநாய் தாக்குதல்: 10க்கும் அதிகமானோர் காயம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகிலுள்ள பகுதியில், தெருநாய் தாக்கிய சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
ஜெயங்கொண்டம் அருகே உள்ள மருதூர் கிராமத்தில் கடந்த சில நாள்களாக தெருநாய்களின் நடமாட்டம் அதிகரித்து, பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
அந்தப் பகுதியில் சாலையில் சென்ற பொதுமக்களை ஒரு தெருநாய் திடீரென விரட்டி தாக்கியதாகவும், இதில் வயதான பெண்கள் உள்ளிட்ட பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெருநாய்கள் ஏற்படுத்தும் பிரச்சினை குறித்து ஏற்கனவே பலமுறை புகார் அளிக்கப்பட்டிருந்தாலும், சம்பந்தப்பட்ட துறையினர் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.