வீட்டு உபயோகப் பொருள் கடைகளில் வருமானவரி துறை திடீர் ஆய்வு
சென்னை திருவொற்றியூர் பகுதியில் இயங்கி வரும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிலையங்களில் வருமானவரி துறையினர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
திருவொற்றியூர் சந்ததி தெருவில் செயல்பட்டு வரும் ஜேஆர் ஏஜென்சி மற்றும் சூர்யா பர்னிச்சர் ஆகிய கடைகளில் அதிகாரிகள் நேரில் சென்று சோதனை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரி செலுத்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக வந்த புகாரின் அடிப்படையிலேயே இந்த ஆய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.