2025 உலகின் மிக ஸ்டைலிஷ் பிரபலங்கள் பட்டியல்: ஷாருக்கான் நியூயார்க் டைம்ஸ் தேர்வு
நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட 2025ஆம் ஆண்டுக்கான உலகின் மிக ஸ்டைலிஷ் பிரபலங்கள் பட்டியலில் பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கான் இடம்பெற்றுள்ளார்.
சமீபத்தில் நியூயார்க் நகரில் நடைபெற்ற ‘மெட்காலா 2025’ விழாவில் கலந்து கொண்ட ஷாருக்கான், டிசைனர் சப்யசாச்சி முகர்ஜி வடிவமைத்த சிறப்பு ஆடை மற்றும் அழகிய ஆபரணங்களுடன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
அவரது தனித்துவமான ஆடை அலங்காரம் சர்வதேச அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து, இந்த ஆண்டின் உலகின் ஸ்டைலிஷ் நபர்கள் பட்டியலில் அவரும் சேர்க்கப்பட்டுள்ளார்.
நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட குறிப்பில், “ஷாருக்கான் இவ்விழாவிற்கு இந்திய பாரம்பரியமும் நவீன நேர்த்தியும் கலந்த ஒரு தனித்துவமான ஸ்டைலை கொண்டு வந்தார்” என்று பாராட்டப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் ஷாருக்கானுடன் மேலும் பல சர்வதேச நட்சத்திரங்களும் இடம் பெற்றுள்ளனர். அதில் சப்ரினா கார்பென்டர், டோச்சி, ஏஸ்ஏபி ராக்கி, விவியன் வில்சன், நிக்கோல் ஷெர்சிங்கர், வால்டன் கோகின்ஸ், ஜெனிஃபர் லாரன்ஸ், ஷாய் கில்ஜியஸ்-அலெக்சாண்டர், கோல் எஸ்கோலா, நோவா வைல் உள்ளிட்ட பிரபலங்களின் பெயர்களும் உள்ளன.