இண்டிகோ விமான சேவைகளில் 5% குறைப்பு – மத்திய அரசு அறிவிப்பு
நாட்டின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான இண்டிகோவின் விமான செயல்பாடுகளில் 5 சதவீத குறைப்பு செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
விமானிகள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் இண்டிகோ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக, கடந்த நாட்களில் 2,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு, பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளானனர்.
இந்த நிலையை தொடர்ந்து சரிசெய்யும் முயற்சியின் பகுதியாக, இண்டிகோவின் 110 விமானங்களை செயல்பாட்டிலிருந்து குறைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.