2030க்குள் மின்சார வாகனத் துறை மதிப்பு 20 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும் – நிதின் கட்கரி
மின்சார வாகனத் துறை வருங்காலத்தில் மிகப் பெரிய வளர்ச்சியைச் சந்திக்க உள்ளது என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் தெரிவித்தார்.
2030ஆம் ஆண்டுக்குள் மின்சார வாகனங்களின் மொத்த சந்தை மதிப்பு 20 லட்சம் கோடி ரூபாய் வரை உயரும் என அவர் கணித்தார்.
2024–25 நிதியாண்டில் மின்சார வாகனங்களின் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
- மின்சார கார்களின் விற்பனை 20.8%,
- மின்சார இருசக்கர வாகனங்களின் விற்பனை 33%,
- மின்சார மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை 18% அதிகரித்துள்ளன.
மேலும், இந்த துறை வளர்ச்சி பெற்றால் வருடந்தோறும் 5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்புள்ளதாகவும், மின்சார வாகனங்களை மையமாகக் கொண்டு 400-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தோன்றும் எனவும் கட்கரி தெரிவித்துள்ளார்.