19 நிமிட வீடியோ லிங்கைத் திறக்க வேண்டாம் – சைபர் நிபுணர்கள் எச்சரிக்கை
சமூக வலைதளங்களில் பரவி வரும் 19 நிமிட வெளிப்படையான வீடியோ லிங்கை அழுத்துவது மிகப்பெரிய அபாயத்தை ஏற்படுத்தும் என இணைய பாதுகாப்பு நிபுணர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த லிங்கின் மூலம் பயனர்களின் வங்கி விவரங்கள் திருடப்பட வாய்ப்பு அதிகமென கூறப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிரம் மற்றும் எக்ஸ் தளங்களில் 19 நிமிட விவகார வீடியோ ஒன்று பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அது AI அல்லது டீப்ஃபேக் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டதாக கருதப்படுகிறது.
வீடியோவில் காணப்படும் நபர்கள் யார் என்பது தெளிவாக தெரியாமல் இருந்தாலும், சில சமூக ஊடக பயனர்கள் ஆதாரமற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு வீடியோவில் யாரென்று தவறாக பெண்களை குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், அந்த லிங்கைச் சொடுக்கியவுடன், சைபர் குற்றவாளிகள் பயனர்களின் சாதனத்தில் மால்வேர் நிறுவி, அவர்களது வங்கி மற்றும் தனிப்பட்ட தகவல்களைப் பறிக்க முயல்கிறார்கள் என பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.