இந்தியா–பாகிஸ்தான் மோதலுக்கு அசிம் முனீரே தூண்டுகோல் என குற்றச்சாட்டு
பாகிஸ்தான் ராணுவத் தலைமை அதிகாரி அசிம் முனீரின் செயல்கள்தான் இந்தியாவுடன் உருவான பதற்றத்திற்கு காரணம் என, அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சகோதரி அலிமா கான் குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபத்தில் ராவல்பிண்டி சிறையில் வைக்கப்பட்டுள்ள இம்ரான் கான் கொல்லப்பட்டார் என்ற வதந்திகள் பரவியன. இதையடுத்து அவரை நேரில் சந்திக்க அவரது சகோதரி உஸ்மா கான் சிறைக்கு சென்றிருந்தார்.
இந்தச் சூழலில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அலிமா கான், ‘ஆப்பரேஷன் சிந்தூருக்கு’ பின் வெடித்த மோதல்களுக்கு, தீவிர இஸ்லாமிய நோக்கத்தைக் கொண்ட அசிம் முனீரின் தீர்மானங்களே காரணம் என்று தெரிவித்தார்.