பொறாமை காரணமாக 4 குழந்தைகளை கொன்ற மனச்சோர்வு பெண் அரியானாவில் கைது!
அரியானா மாநிலம் பானிபட் அருகே உள்ள நவுதலா கிராமத்தில், தன்னை விட அழகாக இருந்ததாக உணர்ந்ததால் 4 குழந்தைகளை கொன்ற ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருமண மண்டபத்தில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி மாயமானார். அதன்பின், பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடியபோது, மண்டபத்தின் ஒரு பகுதியிலிருந்து பெரிய தண்ணீர் வாளியில் சிறுமியின் தலை மூழ்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது.
காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதும், அந்த மண்டபத்தின் சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதன் மூலம், பூனம் என்ற பெண்ணுடன் சிறுமி இருந்தது தெரியவந்தது. போலீசார் அந்த பெண்ணை விசாரித்தபோது, சிறுமியை கொலை செய்தது உண்மை எனத் தெரிவித்து அதிர்ச்சியூட்டினர்.
போலீசார் கேட்ட போது, அந்த பெண் தன்னை விட யாரும் அழகாக இருக்கக்கூடாது என்ற பொறாமை காரணமாக சிறுமியை கொன்றதாகச் சொன்னார். மேலும, விசாரணையில் இதுபோன்று அவர் மூன்று குழந்தைகளையும் கொன்றது முன்னமே தெரியவந்தது.
இந்த மனச்சோர்வு பெண்ணின் கொடூரமான செயலால் அரியானாவில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.