2014ல் தடம் மாறிய விமானத்தைத் தேடும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்
2014ஆம் ஆண்டில் இந்தியப் பெருங்கடலில் மாயமான விமானத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சி, வரும் 30ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று மலேசிய அரசு அறிவித்து உள்ளது.
2014 மார்ச் 8ஆம் தேதி, மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து 227 பயணிகளும், 12 பணியாளர்களும் இணைந்து சீனாவுக்குத் திரண்டுபுறப்பட்ட MH370 விமானம், இந்தியப் பெருங்கடலில் தடம் புரண்டு காணாமல் போனது.
2017ஆம் ஆண்டு வரை, மொத்தம் 26 நாடுகள் இணைந்து 60 கப்பல்கள் மற்றும் 50 விமானங்களைப் பயன்படுத்தி விரிவாக தேடுதல் நடத்தியிருந்தாலும் எந்தச் சுவடும் கிடைக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து, 2018ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த Ocean Infinity என்ற நிறுவனம் மூன்று மாதங்கள் தேடுதல் மேற்கொண்டும் விமானத்தைத் தேடி கண்டறிய முடியாமல் போனது.
கண்டுபிடிக்க முடியாதபட்சத்தில் எந்தத் தொகையும் வழங்கப்படாது என்ற நிபந்தனையுடன், மலேசிய அரசுடன் Ocean Infinity நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது.
ஆனால் விமானத்தின் இருப்பிடத்தை கண்டறிந்தால், இந்திய மதிப்பில் சுமார் ரூ.6.5 லட்சம் கோடி அளவில் பரிசுத்தொகை வழங்கப்படும் எனவும் மலேசிய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியப் பெருங்கடலில் மாயமான அந்த மர்ம விமானத்தை மீண்டும் தேடும் நடவடிக்கையை, அதே Ocean Infinity நிறுவனம் வரும் 30ஆம் தேதி முதல் மறுபடியும் ஆரம்பிக்க இருப்பதாகவும் அரசு அறிவித்துள்ளது.