தனக்கு எட்டு நோபல் விருதுகள் சேர வேண்டியிருந்தது
உலகின் பல பகுதிகளில் ஏற்பட்ட மோதல்களை முடிவிற்கு கொண்டு வந்ததற்காக, தமக்கு குறைந்தது 8 நோபல் பரிசுகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட டிரம்ப், அங்கு பேச்சாற்றும் போது, இந்தியா–பாகிஸ்தான் மோதல் உள்ளிட்ட மொத்தம் எட்டு முக்கிய சண்டைகளை தாம் சமாதானப்படுத்தியதாகவும், ஒவ்வொரு மோதல் தீர்வுக்கும் ஒரு நோபல் விருது கிடைக்க தகுதி உடையவர் தானெனவும் தெரிவித்தார்.
என்னதான் இருந்தாலும், அந்த விருதுகளைப் பெற்றே ஆக வேண்டும் என்கிற எண்ணம் தமக்கில்லை என்றும், பேராசை கொண்டவராக தோன்ற விரும்பவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.