CBSEக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் ‘வந்தே மாதரம்’ பாடலை மையமாகக் கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டியதாக புதிய அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஆண்டின் நவம்பர் மாதம் வரை இந்த நிகழ்ச்சிகள் கட்டாயம் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குறித்து CBSE கல்வித் துறையின் இயக்குநர் பிரக்யா சிங் வெளியிட்ட சுற்றறிக்கையில், ‘வந்தே மாதரம்’ பாடலின் முக்கியத்துவம் மற்றும் வரலாறு குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பள்ளிகள் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், அந்தப் பாடலின் அர்த்தம் மற்றும் இலக்கியப் பின்னணியை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விளக்க வேண்டும் என்றும், ‘வந்தே மாதரம்’ தொடர்பான பல்வேறு போட்டிகளையும் பள்ளிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.