வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு மருத்துவ சேவை — இந்திய மீட்பு குழு செயற்பாடு
டிட்வா புயலின் தாக்கத்தால் இலங்கையின் பல பகுதிகளில் ஏற்பட்ட கனமழை, நிலச்சரிவு மற்றும் பெருவெள்ளம் காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். பலர் உயிரிழந்ததுடன், எண்ணற்ற குடும்பங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன.
இந்த நிலைமையை அடுத்து, இந்தியா உடனடி உதவியாக மீட்பு படையை இலங்கைக்கு அனுப்பியது. இந்த குழுவினர் அங்கு சென்று, பாதிப்புக்குள்ளான மக்களுக்கு அவசியமான உதவிகளை செய்து வருகின்றனர்.
மேலும், அவசர சிகிச்சையை வழங்கும் வகையில் உடனடியாக செயல்படுத்தக்கூடிய தற்காலிக கள மருத்துவ மையம் அமைத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளித்து வருகின்றனர்.