ரேஜ் பெய்ட் – 2025 ஆம் ஆண்டின் சிறப்பு சொல்
2025-ஆம் ஆண்டிற்கான சிறந்த சொல்லாக ‘ரேஜ் பெய்ட்’ என்பதைக் ஆக்ஸ்ஃபோர்டு அகராதி தேர்வு செய்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட சொல்லை அந்த ஆண்டின் முக்கிய சொல்லாக அறிவிப்பது ஆக்ஸ்ஃபோர்டின் வழக்கமான நடைமுறையாகும்.
இணையத்தில் நாம் காணும் சில உள்ளடக்கங்கள், பார்க்கும் நேரத்தில் திட்டமிட்டு நம்மை கோபமடையச் செய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டவை போலத் தோன்றும். அந்த உணர்ச்சியைச் சுட்டிக்காட்டுவதற்கான சொல் தான் ‘ரேஜ் பெய்ட்’ எனப்படுகிறது.
இப்போது சமூக வலைதளங்களில் கோபத்தை தூண்டும் விதமாக உருவாக்கப்பட்ட பதிவுகள், வீடியோக்கள், ரீல்ஸ் போன்றவற்றை வெளியிட்டு அதிக லைக்குகள் சேர்ப்பது ஒரு புதிய போக்காக மாறியுள்ளது.
இந்த வகை உள்ளடக்கங்கள் அதிகரித்ததன் விளைவாக, இந்த ஆண்டில் ‘ரேஜ் பெய்ட்’ என்ற சொல் இணையத்தில் முன்பைவிட மூன்று மடங்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மூன்று நாட்கள் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் 30,000-க்கும் மேற்பட்டோர் தங்கள் தேர்வை பதிவு செய்ததைத் தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டின் அதிகாரப்பூர்வ ஆக்ஸ்ஃபோர்டு வார்த்தையாக ‘ரேஜ் பெய்ட்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.